சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சென்னை: சூரியனை ஆராய்வற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 புள்ளியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. சுமார் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியில் இருந்து 800 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தி சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய இஸ்ரோ முதலில் திட்டமிட்டது. ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா மண்டலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) பகுதியில் இருந்து பார்க்கும்போது துல்லியமாக ஆய்வு செய்யலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை