105 வயதிலும் தண்ணீர் குடத்துடன் மாடிப்படி ஏறும் ஆந்திர மாநில மூதாட்டி

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கைகல் கிராமத்தை சேர்ந்தவர் அச்சம்மாள். வயது 105. இவரது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 7 மகள்கள், 4 மகன்கள். மூத்த மகள் ஞானம்மாளுக்கு 85 வயது. கடைசி மகனுக்கு 49 வயது. அச்சம்மாளுக்கு 26 பேரன், பேத்திகள், 35 கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர்.

100 வயதை கடந்தாலும் அச்சம்மாள் தனது பணிகளை தானே செய்கிறார். வீட்டிற்கு தேவையான தண்ணீரையும் வெளியில் குழாயில் பிடித்து, மாடி வீட்டுக்கு ஏறிச் சென்று சமையல் அறையில் வைக்கிறார். தற்போது, 30 வயதை கடந்தவர்கள் கூட மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என பல வகை நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், 100 வயதை கடந்த இந்த அச்சம்மாளின் சுறுசுறுப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆச்சர்யப்படுகின்றனர். இந்த வயதில் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பு என பாட்டியிடம் கேட்டபோது, புன்சிரிப்புடன் அவர் கூறும்போது, ‘‘ தினமும் களியும், கீரையும் தான் எனக்கு சாப்பாடு. சிறுதானிய உணவுகளையும் சேர்த்துக் கொள்கிறேன். இன்று வரை கஷ்டப்பட்டு உழைக்கிறேன். வயதாகி விட்டதே என கவலைப்பட்டது இல்லை. எனக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எதுவும் கிடையாது’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை