எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது போல இருந்தது - 10,000 ரன்களை கடந்த தருணத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர்

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தான் கடந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது போல இருந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் கவாஸ்கர். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை எடுத்துள்ளார் அவர். இதில் 34 சதம் மற்றும் 45 அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 51.12. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் 10,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார். அதன் பிறகு இதுவரையில் இந்த மைல்கல்லை 14 வீரர்கள் எட்டினர். அதில் நேற்று இணைந்தது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை