தங்க வில் - அம்பு: அயோத்தி ராமர் சிலையின் முழு தோற்றம் வெளியீடு

மைசூரு: அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராமர் குழந்தையாக நிற்கும் நிலையில் தங்க வில் மற்றும் அம்புகளை ஏந்தியவாறு சிலை சித்தரிக்கிறது.

51 இன்ச் உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். நேற்று கருவறைக்குள் சிலை வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகின. என்றாலும் அது துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர் சிலையின் கண்கள் மட்டும் மூடியிருந்த மற்றொரு படம் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதனிடையேதான் முழுமையான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களில் குழந்தை ராமரின் முகம் மற்றும் தங்க வில் மற்றும் அம்பு ஆகியவற்றை அடங்கிய முழுமையான தோற்றமாக காட்சியளிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை