நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு புதிய சம்மன்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.90 கோடியே 25 லட்சத்தை கடனாக அளித்தது.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் அந்நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. 50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை