மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க திட்டம்

புதுடெல்லி: மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகத்தினரின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறோம். சமூகநீதியை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை