“நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள்” - ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் நேரடியாக கருத்து தெரிவிக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்ட ஜாக்குலின் அதில், "நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள், நான் சக்தி வாய்ந்தவள், நான் என்னை ஏற்றுக்கொள்கிறேன், எல்லாம் சரியாகிவிடும். நான் வலுவாக இருக்கிறேன், எனது இலக்குகள் மற்றும் கனவுகளை நான் அடைவேன், என்னால் அதைச் செய்ய முடியும்" என்று மேற்கோளை சுட்டிக்காட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை