கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி மீது புகார் | கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வப்னா சுரேஷ் மயங்கி விழுந்தார்

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புக்கான என்ஐஏ, அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் அண்மையில் நீதிபதியிடம் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்த பின்னணியில் ஸ்வப்னாவின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது மதநிந்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை