ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தவிர்க்க, ஊடகங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான இணையதளங்களில் விளம்பரம் செய்வதை தவிர்க்குமாறு அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த அறிவுரையை அமைச்சகம் வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை