உம்ரான் மாலிக் மற்றும் சிலர்... ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் 5 பவுலர்கள்!

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் ஐந்து பவுலர்கள் யார் என பார்ப்போம். இந்தப் பட்டியலில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் போட்டிக்கு போட்டி தனது பந்துவீச்சில் வேகத்தை கூட்டி வருகிறார் உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் தனது வேகத்தை லேசாக வெளிப்படுத்தி இருந்தார். அதன் பலனாக அவர் அந்த அணியில் தக்க வைக்கப்பட்டார். நடப்பு சீசனில் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிவேகமாக பந்து வீசிய பவுலருக்கான விருதை வென்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை