டெல்லி ஜஹாங்கிர்புரியில் இந்து, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றிய மூவர்ணக் கொடி ஊர்வலம்

கடந்த சில நாட்களாகவே டெல்லி ஜஹாங்கிர்புரி இந்து, முஸ்லிம் மோதலின் அடையாளமாக பேசப்பட்ட நிலையில் அப்பகுதி வாழ் இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட மூவர்ணக் கொடி ஊர்வலம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

டெல்லி ஜஹாங்கிர்புரி சி மற்றும் டி ப்ளாக் பகுதிவாசிகள் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலம் சென்ற வழியில் இருந்த குடியிருப்புகளில் வசித்தோர் ஊர்வலத்தை மலர் தூவி வரவேற்றனர். மாலை 6 மணியளவில் தொடங்கிய ஊர்வலம் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை