சென்னை: டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஃபேக்டரி ரேசிங் குழு எனும் பெருமை பெற்ற டிவிஎஸ் ரேஸிங்கின் டைட்டில் பார்ட்னர் ஆகியுள்ளது பெட்ரோனாஸ். இந்த இரு நிறுவனமும் இணைந்து ரேஸ் குழுவை உருவாக்க உள்ளன.
இந்த சீசனில், புதிதாகப் பெயர் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேஸிங் அணிக்கு தனது அதிகத் திறன் வாய்ந்த என்ஜின் ஆயிலான பெட்ரோனாஸ் ஸ்பிரிண்டாவை விநியோகிக்கவுள்ளது பெட்ரோனாஸ். உள்ளூர் அளவிலான அனைத்து சாலை பந்தயம், சூப்பர்கிராஸ், ரேலி வடிவ பந்தயங்களில் இக்குழு பங்கேற்கவுள்ளது. அது மட்டுமல்லாமல், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உடன் வர்த்தகச் செயல்பாடு சார்ந்த கூட்டுறவையும் மேற்கொண்டுள்ளது பெட்ரோனாஸ் லூப்ரிகேண்ட்ஸ் இண்டர்நேஷனல். இதன் மூலம் பெட்ரோனாஸ் டிவிஎஸ் ட்ரூ4 ரேஸ்ப்ரோ எனும் என்ஜின் ஆயில் வரும் மே மாதம் முதல் இந்தியா முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports